வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் அவுட் கொடுத்தும் நகர மறுத்த வீரர் யூசுப் பதான்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      விளையாட்டு
Yusuf Pathan 2019 12 13

வதோதரா : மும்பை அணி பரோடா அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஞ்சி டிராபி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. 534 என்ற இமாலய இலக்கை விரட்டிய பரோடா அணி பரிதாபமாக 224 ரன்களுக்குச் சுருண்டது. ஏற்கெனவே தமிழக-கர்நாடகா போட்டியில் நடுவர் விளையாடியதைத் தொடர்ந்து இந்தப் போட்டியிலும் நடுவர்கள் கைவரிசை இருந்திருக்கும் என்று தெரிகிறது. பரோடா பேட்ஸ்மென்கள் அவுட் ஆகி மார்ச் பாஸ்ட் செய்து கொண்டிருக்கும் வேளையில் நடுவர் அளித்த அவுட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யூசுப் பதான் அங்கிருந்து நகர மறுத்தார்.

என்ன நடந்தது எனில், 2-வது இன்னிங்சின் 48-வது ஓவரை பவுலர் ஷஷாங்க் அத்தார்தே வீச வந்தார். 2-வது பந்தில் யூசுப் பதான் முன் காலை நகர்த்தி தடுப்பாட்டம் ஆடினார். பந்து பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டர் பிஸ்டாவிடம் நேராக பிட்ச் ஆகாமல் கையில் சென்றது. நடுவர் உடனே கையை உயர்த்தாமல் கொஞ்ச நேரம் சென்று கையை உயர்த்தினார். ஆனால் பதான் பெவிலியன் திரும்ப மறுத்தார்.  நடுவரை நோக்கி இரண்டு கைகளையும் விரித்த படி இது என்ன அவுட்டா என்பது போல் ஏமாற்றச் செய்கை செய்தார். நகர மறுத்த யூசுப் பதானை, மும்பை வீரர் அஜிங்கிய ரஹானே சமாதானம் செய்ய கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. பிறகு மெதுவாக தலையை ஆட்டிய படியே பெவிலியன் நோக்கி யூசுப் பதான் நடந்து சென்றார். இந்தச் சம்பவத்தை அடுத்து ரஞ்சி டிராபிகளில் நடுவர்களின் தரம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து