முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகன்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய அரியவகை ஆண் கடல் பசு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-      ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பகுதியில் மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை ஆண் கடல் பசு கரை ஒதுங்கியது, வனத்துறையினர் பிரோத பரிசோதனை செய்து பின் மணலில் புதைத்தனர்.
     கடல் பசு என்பது கடலின் ஆழமான  மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களை உண்டு வாழும் குட்டி போட்டு பால்கொடுக்கும் ஒரு அரிய வகை கடல் வாழ் உயிரினம். மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பசுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன, ஆனால் கடந்த 2018-19 ஆம் ஆண்டு வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பில் 70 முதல் 140  கடல் பசுக்கல் மட்டும்மே தற்போது வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால் சிலர் கடல் பசுகளை வேட்டையாடி வருகின்றனர். கடல் பசுகள் 3 மீற்றர் நீளமும் 400 கிலோ எடை வரை வளரும். இந்நிலையில் நேற்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் கடற்கரை பகுதியில் அரியவகை ஆண் கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கடற்கரை ஒரங்களில் மீன் பிடித்து கொண்டிருந்த சிறு தொழில் மீனவர்கள் கடல் பசு இறந்து  கரை ஒதுங்கியது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வனபாதுகாவலர் அசோக்குமார் தலைமையில் வந்த வனத்துறை அதிகாரிகள் கடலில் இறந்து கரை ஒதுங்கிய  3 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம்,530 கிலோ எடை கொண்ட 35 வயது மதிக்கதக்க ஆண் கடல் பசுவை கரைக்க எடுத்து வந்து கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் கடற்கரை அருகில் உள்ள மணல் பகுதியில் புதைத்தனர். இது குறித்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:- கடல் பசு கடல் உயிரினம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இவ்வகை விலங்கினங்கள்; தமிழ்நாடு கடற்கரை ஓரமாக மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்ந்து வருகிறது. இது ஆழம் குறைந்த பகுதியில் வாழுகிறது. இதனை மீனவர்கள் பிடித்து எண்ணெய்க்காகவும், உணவுக்காகவும் அழித்து வருகிறார்கள்.இன்று ஆனந்தபுரம் பகுதியில் இறந்த கடல் பசு பெரியகப்பல்களில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதே போல் மீனவர்கள் வலைகளில் தவறுதலாக பிடிபடும் கடல் பசுகளை கடலில் திருப்பி விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூபாய் 10 ஆயிரம் சன்மானமாக வழங்கபடும். இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து