முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் தளவாட பொருட்கள் கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் வாக்குப்பதிவிற்கான தேர்தல் தளவாடப் பொருட்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் குழு மூலமாக அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம்,  திருப்புல்லாணி, மண்டபம், ஆர்எஸ் மங்கலம், திருவாடனை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டத்தில் 27.12.2019 அன்றும், பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டத்தில் 30.12.2019 அன்றும் என முறையே ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1,819 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற் கட்ட வாக்குப் பதிவில் 813 வாக்குச்சாவடிகளிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 1,006 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  மேலும், முதற்கட்ட வாக்குப்பதிவில் 6,192 பணியாளர்களும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 7,823 பணியாளர்களும் என மொத்தம் 14,015 பணியாளர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டி,  வாக்குச்சீட்டுகள், தாள் முத்திரை, அழியாத மை, தேர்தல்  படிவங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வகையான தேர்தல் தளவாட பொருட்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் குழுக்கள் மூலமாக காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 
அந்த வகையில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று நசம்பந்தப்பட்ட மண்டலக் குழு அலுவலர்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் தளவாட பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளின் போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் வீ.கேசவதாசன், உதவி திட்ட அலுவலர் பி.கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா, ஜே.அப்துல் ஜப்பார், தங்கபாண்டியன், ரமேஷ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து