முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
 ராமநாதபுரம் மாவட்டம், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் தளவாட பொருட்களை முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து மண்டல அலுவலர் குழு மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளையும் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ் மங்கலம், திருவாடனை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக (27-12-19) அன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 68.78 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் இன்று(30-ந் தேதி) நடைபெறவுள்ளது.  இதற்காக 1006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 106 வாக்குச்சாவடிகளில் இணையதள கண்காணிப்பு, 34 நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம், 123 வீடியோகிராபி போன்ற நடவடிக்கைகள் மூலம்  கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்தல் பணிக்காக 7823 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குபதிவிற்கு தேவையான வாக்காளர்கள் பட்டியல் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் முத்திரை, அழியாத மை, தேர்தல் படிவங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வகையான தேர்தலில் பயன்படுத்தக் கூடிய பொருட்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் குழுக்கள் மூலமாக காவல் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றிட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஜி.சிவராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், உதவி திட்ட அலுவலர்கள் கிறிஸ்டோபர், பி.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அன்புக்கண்ணன், ஏ.பாண்டி, பி.சாவித்ரி, ஏ.மங்களேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து