முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

சனிக்கிழமை, 4 ஜனவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,832-க்கும், ஒரு சவரன் ரூ.30,656-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.768 உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.51.00-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்க நிலையில் தங்கம் விலை காணப்பட்டது. சில சமயங்களில் அதிரடியாக விலை உயர்ந்தும் வந்தது.

இந்நிலையில் நேற்று  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் இதுதான் முதல்முறை. இதற்கு முன்னர் தங்கம் விலை சவரன் ரூ.30,000 வரை வந்துள்ளது தான் புதிய சாதனையாக இருந்து வந்தது. பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அடுத்தடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

உலக பொருளாதாரம் மந்தமான ஒரு சூழ்நிலையில் இருக்கும் பட்சத்திலோ, பொருளாதார சந்தையை சார்ந்த பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையிலோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இதுவும் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து