தங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை

சனிக்கிழமை, 11 ஜனவரி 2020      வர்த்தகம்
gold rate 2020 01 11

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ. 30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று (ஜனவரி 11) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,820 ஆக உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 30,400 ரூபாயிலிருந்து நேற்று 30,560 ரூபாயாக அதிகரித்தது. நேற்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை 31,920 ரூபாயிலிருந்து நேற்று 32,080 ரூபாயாக உயர்ந்தது. தூய தங்கத்தின் விலையும் 160 ரூபாய் உயர்ந்திருந்தது. வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்திருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.10 ரூபாயிலிருந்து 50.60 ரூபாயாக அதிகரித்தது. அதே போல, ஒரு கிலோ வெள்ளி 50,100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் உயர்ந்து ரூ.50,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து