உடல்நலக்குறைவால் காலமான கன்னட அறிஞரின் உடல் அடக்கம் - முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      இந்தியா
Sidananda Murthy 2020 01 12

 பெங்களூர் : கன்னட அறிஞர் சிதானந்தமூர்த்தி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 கன்னட அறிஞரும், ஆராய்ச்சியாளருமான எம்.சிதானந்தமூர்த்தி (88), பெங்களூரில் ஹம்பிநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 9-ம் தேதி சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். ஹம்பிநகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் சுரேஷ்குமார், வி.சோமண்ணா, எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தினர். சாமராஜ்பேட் பகுதியில் உள்ள லிங்காயத்துகள் மயானத்தில் நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கன்னட மக்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கிய சிதானந்தமூர்த்தி, பேராசிரியராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் பங்காற்றியவர். பின்னர், கன்னட எழுத்தாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் அறியப்பட்டவர். வலதுசாரி சித்தாங்களை தீவிரமாக ஆதரித்து வந்ததால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளுடன் நெருக்கமாக இருந்து வந்தார். கன்னட மொழியின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டவர். கன்னட சக்தி மையம் என்ற பெயரில் அமைப்பை நடத்திக் கொண்டு, கன்னட மொழி வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க அரும்பாடுபட்டவர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அதை வன்மையாகக் கண்டித்தார். மேலும், கன்னட மொழிக்கும், இந்து மதத்துக்கும் திப்பு சுல்தான் செய்துள்ளதாகக் கூறப்படும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பூட்டினார். சிதானந்தமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி, துணை முதல்வர்கள் கோவிந்த்கார்ஜோள், அஸ்வத்நாராயணா உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து