டோனி வழியில் நானும் செல்வேன் - ஆஸி. வீரர் அலெக்ஸ் கேரி விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      விளையாட்டு
Alex Carey prefer 2020 01 12

மெல்போர்ன் : டோனி வழியில் நானும் செல்வேன் என்று ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த பினிஷர்களைப் பார்த்தோமானால், குறிப்பாக டோனியைபார்த்தோமானால் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறேன். கடந்த ஆண்டு அவருக்கு எதிராக ஆடும் அதிர்ஷ்டம் பெற்றேன், அவரது ஆட்டத்தை நெருக்கமாக அவதானித்ததில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இந்தியாவுக்கு அவர் பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார்,  அவர் வழியில் நான் ஒருநால் செல்வேன். என்னுடைய ஆட்டத்தில் இன்னும் பல பகுதிகள் சரி செய்யப்பட வேண்டியுள்ளது. மிடில் ஆர்டர் அல்லது கீழ்வரிசையில் இறங்குவேன் என்று நினைக்கிறேன். ஆகவே ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நல்ல பினிஷராக உருவெடுக்க விரும்புகிறேன் என்று அல்கெஸ் கேரி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து