விராட் கோலிதான் நேர்மையான கேப்டன்: இர்பான் பதான் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      விளையாட்டு
Virat Kohli-Irfan Pathan 2020 01 12

புனே : இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தன்னுடைய இடத்தில் இளம் வீரர்களை பேட்டிங் செய்ய அனுமதித்த விராட் கோலி நேர்மையான கேப்டன் என இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 201 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தவான், கேஎல் ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் விளாசியது. இதனால் 3-வது வீரராக களம் இறங்க வேண்டிய கேப்டன் விராட் கோலி களம் இறங்காமல் சஞ்சு சாம்சனை களம் இறக்கினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யரை இறக்கினார். ஐந்தாவதாக மணிஷ் பாண்டேவை இறக்கினார். 6-வது வீரராக விராட் கோலி களம் இறங்கினார்.இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த விராட் கோலி நேர்மையான கேப்டன் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து