நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      இந்தியா
Nirbhaya case accused 2020 01 14

புது டெல்லி : நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்று தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள நான்கு குற்றவாளிகளில் 2 பேர் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அதே போல் ராம்சிங் என்ற குற்றவாளி சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை டெல்லி நீதிமன்றமும் உறுதிசெய்தது. அதே போல் கடந்த மாதம் 18-ம் தேதி மேற்கண்ட நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் அவர்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.  இதனையடுத்து, நிர்பயா தாய் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளில் இருவர் அதாவது வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இது குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில்,நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரி வினய் சர்மா, முகேஷ் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 22-ம் தேதி நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து