மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
cm edapadi inaug1 2020 01 14

சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் கரூர் மாவட்டம், கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள ஆப்பரேட்டர்  அட்வான்ஸ்டு  மெஷின்   டூல்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மதுரை, அம்பத்தூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் மற்றும் பணிமனை கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் ஆர்வத்தை  நிறைவு செய்யவும், தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், புதிய  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை துவக்குதல், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆப்பரேட்டர்  அட்வான்ஸ்டு  மெஷின்   டூல்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடங்கள்,  திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேரிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம்,  திண்டுக்கல் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம்,  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டூல் & டை மேக்கர் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ரெப்ரெஜிரேஷன் அண்டு ஏர் கண்டிஷனிங் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம்,  பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் டெக்ஸ்டைல் மெகட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடம் என மொத்தம் 5 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறை மற்றும் பணிமனை கட்டிடங்களை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)  மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து