முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கான்பெரா : ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று நடைபெற்றது.  உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33),  ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து கால் இறுதி போட்டியில்,  அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி நேற்று முன்தினம் எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில், ஸ்லோவேனியா - செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி சந்திக்க உள்ளது. முதல் சுற்றின் வெற்றிக்கு பிறகு, சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து