முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிசாட் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 2020- ம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள். இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து