முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது.

மாடல் டவுன் தொகுதியில் கபில் மிஷ்ரா, ரோகிணி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தா, சாந்தினி சவுக் தொகுதியில் சுமன் குமார் குப்தா உள்ளிட்ட 57 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கபில் மிஷ்ரா முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து