முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக நீளமான கேக் கேரளாவில் தயாரித்து சாதனை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6.5 கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகில் மிக நீண்ட கேக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது

உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகம் கின்னஸ் ஆகும். ஓவியம், நடனம், விளையாட்டு, சாகசம் போன்ற பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழத்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6.5 கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகில் மிக நீண்ட கேக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் அம்மாநிலத்தின் திருச்சூர் நகரில் நடந்த நிகழ்வில் இந்த கேக் செய்யப்பட்டது. சுமார் 1,500 பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள், 12,000 கிலோகிராம் சர்க்கரை மற்றும் மாவைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவழித்து இதை உருவாக்கினர். நான்கு அங்குலங்கள் (10 சென்டிமீட்டர்) அகலமும், தடிமனும் கொண்ட இந்த வெனிலா கேக், சுமார் 27,000 கிலோகிராம் (59,500 பவுண்டுகள்) எடை கொண்டது. இது குறித்து கேரளா பேக்கரி சங்கத்தின் செயலர் கூறுகையில்,

6500 மீட்டர் உடைய இந்த கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க உள்ளது. அதன் நீளத்தை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக , சீனா நாட்டின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய பழ கேக்கை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து