முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

காத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் ககேந்திர தபா. 27 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. கடந்த ஆண்டு வரை உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை இவர்தான் தக்க வைத்து இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93 சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நேபாளத்தின் ககேந்திர தபா தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார். கின்னஸ் சாதனை படைத்ததால் உலகின் சில நாடுகள் அவரை அழைத்து கவுரவித்தன. என்றாலும் நேபாளத்தில் அவர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ககேந்திர தபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து