முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்டம் என்பது அதை கொடுக்கும் சட்டம்: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் - சென்னை விழாவில் நிர்மலா சீதாராமன் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

சென்னை : குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம் என்றும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் சென்னை விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா  நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சி  தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது,

அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, நீதிமன்ற உத்தரவால்  நடக்கிறது. அந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். யாருடைய அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் அல்ல. பழைய நடைமுறைகளில்  எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் எனக்கூறுகிறார்களோ அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம்.  நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. முறையாக பதிவு செய்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

குடியுரிமை சட்டத்தை பற்றி பேசுவோர் இலங்கை அகதிகள் முகாமை பற்றி பேசவில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை  சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள். தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும். குடியுரிமையை பறிக்க இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. பாகிஸ்தான்,  வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், 1995-ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது என்று கூறினார்.

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து  உண்மைக்கு புறம்பாக பேசி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்க வேண்டாம், பொறுப்புடன் பேச வேண்டும். 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள், 172 வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 1964-  2008 வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து