அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வீடியோ

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      உலகம்
US-iran controversy Video 2020 01 20

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஆயுதம் ஈரான் ஏவுகணைகளை தாக்குவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 2.50 நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோவில், வான்வெளியில் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

 இதனால் தான் ஈரான் ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கவில்லை. இவை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு தாக்குதல்கள். பார்க்கவே பயங்கரமாக உள்ளது. எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ இதே தலைப்பில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் மூலம் இணையத்தில் தேடியபோது, உண்மையில் இது வீடியோ கேம் ஒன்றின் காட்சிகள் என தெரியவந்துள்ளது. போஹெமியா இன்டராக்டிவ் எனும் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தளத்திற்கென 2013-ம் ஆண்டில் உருவாக்கிய ஆர்மா 3 எனும் வீடியோ கேமின் காட்சிகளே சர்ச்சை தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து