முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மதுபானம் விற்பனை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

 

தமிழகத்தில் 5600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 300 கடைகள் உள்ளன. போகிப்பொங்கல் தினமான 14-ந்தேதி மற்றும் காணும் பொங்கலான 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இது இதுவரையில் இல்லாத விற்பனை ஆகும். காணும் பொங்கல் தினத்தில் ரூ.175 கோடிக்கும், போகி பண்டிகை அன்று ரூ.180 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது வார இறுதியில் நடைபெறும் விற்பனையை விட அதிகமாகும். வார இறுதியில் சராசரியாக ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை விற்பனை ஆகும். அதை விட போகி மற்றும் காணும் பொங்கலில் விற்பனை நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து