தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
TN Govt Cabinet 2020 01 20

சென்னை : தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் அ.தி.மு.க. தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அதன்படி தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் ஸ்ரீபெரும்புதூரில் சீனாவின் விண்டெக் மின்சாரவாகன தயாரிப்பு நிறுவனத்தை அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து