முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

லக்னோ : பிரதமர் மோடி தலைமையில் அயோத்தியில் வானத்தை தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என்று அமித்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறாது.  யாருடைய குடியுரிமையையும் பறிக்க திருத்தப்பட்ட சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. நாங்கள் எதிர்ப்பால் வளர்க்கப்பட்டோம். எனவே, எதிர்ப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாக குறைந்துள்ளது. அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதமாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பலர் அரண்மனை வீடுகளை விட்டு தற்போது குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களுக்கு வீடுகளை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருகிறார். இது தவறா? என்று கேள்வியெழுப்பினார்.  இதற்கிடையில், ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில் அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் அமித்ஷா உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து