தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      தமிழகம்
tn-pondy dry weather 2020 01 21

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகம் மற்றும் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.  திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவும்.  ஜன.22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நகரில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்சமாக 22 டிகிரி டெல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து