முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆசோலனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசினோம். எங்களால் உதவ முடிந்தால், நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுடையிலான பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய இம்ரான் கான், இந்தியாவுடனான பிரச்சினை பெரிய பிரச்சினை. வேறு எந்த நாட்டினாலும் முடியாது என்பதால், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா தனது பங்கை வகிக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து