சரியான பதில்களைச் சொல்லி ஒரு கோடி வென்ற மாற்றுத்திரனாளி

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      தமிழகம்
Handicapped one crores 2020 01 22

நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா வாய் பேசமுடியாத காது கேட்காத மாற்றுத்திரனாளி பெண். இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியான பதில்களைச் சொல்லி ஒரு கோடி ரூபாய் வென்றிருக்கிறார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் ஆகியோர் ஒரு கோடிக்கான காசோலையை கௌசல்யாவிடம் வழங்கினர். நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் அவர் குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே தனது ஆசை என்று அப்போது கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து