குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மம்தா பேரணி

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      இந்தியா
mamata banerjee 2020 01 22

Source: provided

கொல்கத்தா : மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பேரணி நடத்தினர்.  

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணிகளை நடத்தி வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக டார்ஜிலிங்கில் நேற்று மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று பேரணி நடத்தினர். இதில் மாநில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து