முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வைரஸ் தாக்குதல் ஹாங்காங், மக்காவ், தைவான், நேபாளம், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொடர்ந்து சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கிழக்கு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 237  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பீதியுடன் 20,000 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமற்ற சீனப் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை புனே மருத்துவத் துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே  சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஐதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து