முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமாடிக்னாக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. 

 பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மினாஸ் ஜெராய்ஸ் மாகாணத்தில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலியானதோடு, 17 பேர் மாயமாகி உள்ளனர். 

துருக்கியின் இலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 22 பேர் பலியான நிலையில் நேற்று முன்தினம் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் கடந்த வியாழக்கிழமை கியாஸ் டேங்கர் லாரி ஒன்று ஆட்டோ பழுது பார்க்கும் கடை மீது மோதி வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமாடிக்னாக் தீவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து