முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

நெல்லை : களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கடந்த 21-ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து, டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 14-ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இருந்து ஷேக்தாவுது என்பவரை அங்குள்ள தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பணம் சப்ளை செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதால் இந்த வழக்கை  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனால் வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மத்திய அரசு அனுப்பியது. இதனை தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து