முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் நடந்த மோசடி பற்றி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அந்த தேர்வு தொடர்பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்து இருக்கிறது.

இதனிடையே, குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களில் விக்னேஷ் என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோன்று சுதாராணி என்பவர் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி ஆவார்.

இதனிடையே, 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், பத்திர பதிவு துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் வடிவு ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் பாயும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து