முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் கோரிக்கையை ஏற்க கவர்னர் மாளிகை அண்ணா அறிவாலயம் அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்க கவர்னர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் அல்ல என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கவர்னர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து அமைச்சர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்க கவர்னர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது. ஸ்டாலின் எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுப்பார். குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள் ஏதாவது அசம்பாவிதங்களை நிகழ்த்தினால் அதை கண்டிக்க மாட்டார். ஆனால் இந்து சம்பந்தப்பட்ட நபர்களால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக, பேரணியாக ஒரு பிரளயமே நடத்துவார்.உதாரணமாக இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டு பலர் இறந்தபோதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட போதும், சிவகாசியில் 8 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும், திருச்சியில் இந்து முன்னணி தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட போதும் ஸ்டாலின் கண்டன அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ஏனென்றால் அதில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் தேர்தலுக்காக ஸ்டாலின் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறார். இஸ்லாமிய சமுதாய மக்களின் ஒட்டுமொத்த ஓட்டையும் தான் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோல் அவர் செய்கிறார். இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக தனது குடும்பத்தில் உள்ளவர்களை தேர்தல் சமயத்தில் பட்டை போட விடுவார். தேர்தல் முடிந்த பின்பு இந்துக்களை திட்டுவார். இந்துக்களின் விசேஷ நாட்களுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்க மாட்டார்.ஆனால் அண்ணா தி.மு.க. அப்படி அல்ல. எல்லா மதத்தினரையும் ஒன்று போல் நடத்துகிறோம். அண்ணன் தம்பிகளாக பாவிக்கிறோம். பகுத்தறிவு என்ற பெயரில் இந்துக்களை கிண்டல் செய்வதும், கேலி செய்வதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. ஆனால் உண்மையான இந்துக்கள் தி.மு.க.வின் நிலையை நன்கு புரிந்து உள்ளனர். அவர்கள் இனி எந்த காலத்திலும் தி.மு.க.வை ஆதரிக்க மாட்டார்கள். நாங்கள் தீவிரவாதத்தைத் தான் எதிர்க்கிறோம். இஸ்லாமியர்களை அல்ல. அவர்கள் எங்கள் நிலையை அறிவார்கள். நாங்கள் மாமன் ,மச்சான், அண்ணன், தம்பியாகத் தான் இஸ்லாமியர்களுடன் பழகுகிறோம். அவர்களும் அ.தி.மு.க.வை தான் ஆதரிப்பார்கள். ஸ்டாலின் இந்துக்களின் விரோதியாக செயல்படுகிறார். இனி ஒரு காலத்திலும் இந்துக்கள் தி.மு.க. விற்கு வாக்களிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து