முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர், விழுப்புரம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருவாரூர் : திருவாரூர், விழுப்புரத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து திருவாரூர் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

இதை போல சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம்பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து