முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்டி வைத்தியம் மூலம் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்த மாணவர்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருப்பூர் : கொரோனா வைரசை குணப்படுத்த பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து கண்டுபிடித்த திருப்பூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அதனை கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர் ஒருவர் சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாகவும், அதனை கலெக்டரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து மருந்து மற்றும் விண்ணப்பத்தை கலெக்டரிடம் அளித்தார். விசாரணையில் அந்த மாணவர் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் இசக்கிராஜ் (வயது14) என்பது தெரியவந்தது.

அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எனது பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்துள்ளேன். இந்த வைரஸ் தும்மல் மூலம் பரவுகிறது. இந்த நாட்டு மருந்தை சாப்பிட்டால் நோய் தாக்கியவரின் மூச்சுக்குழாய், நுரையீரல் மற்றும் உணவு குழாய் ஆகியவைகள் படிப்படியாக சீராகிவிடும்.

நான் கண்டுபிடித்த மருந்தை கலெக்டரிடம் அளிக்க முயன்றேன். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று வரவேண்டும் என்று கூறினர். அதன்படி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் கலெக்டரிடம் நான் கண்டு பிடித்த மருந்தை கொடுத்துள்ளேன். இதனை கோவை அல்லது வேறு சோதனை கூடத்தில் பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து