முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்வு அமெரிக்கா உதவியை ஏற்கும் சீனா

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளதால் சீன மக்கள் பீதியில் உள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தாய்லாந்து நாட்டில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்தது.  அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீனா தேசிய சுகாதார ஆணையம் கூறுகையில்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். அவர்கள் அனைவரும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராட  அமெரிக்காவின் உதவியை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு உதவி வழங்க அமெரிக்கா பலமுறை தனது விருப்பத்தை  வெளிப்படுத்தியது. தேவையான உதவி விரைவில் வழங்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்வதற்கும், கட்டுப்படுத்த உதவுவதற்கும் அமெரிக்கா நிபுணர்களும் உடனிருந்து உதவுவார்கள் என்ற சலுகையை சீனா ஏற்றுக் கொண்டதாக அமெரிக்க அரசு அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து