முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் சரண்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம் சரண் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹார், பேட்ஹிஸ், ஹிரேட் மாகாணங்களை சேர்ந்த 59 தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப் படையினரிடம் சரண் அடைந்தனர்.  ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதல்களுக்கு பயந்து கடந்த ஜனவரி மாதம் முதல் 500-க்கும் அதிகமான தலிபான் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து