முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்துதல் குறித்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் காட்டமான கேள்வி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் பல்வேறு காட்டமான கேள்விகளை எழுப்பிய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் மார்ச் மாதம் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கை  விசாரித்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் ஒருவர் 2-வது வீடு வாங்க கட்டுப்பாடு விதித்தால் என்ன?. இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது?. தமிழகத்தில் எத்தனை பேருக்கு சொந்த வீடு உள்ளது?. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை பேருக்கு சொந்த வீடு உள்ளது?. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் எப்போது முழுமை பெறும் ? ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வீடு வாங்குவதற்கு அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன? ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போர் விவரம் அரசிடம் உள்ளதா ? இல்லாவிடில் ஏன் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது? அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேறும் வரை தனிநபர், ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வரக் கூடாது? ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க கடன் தரக் கூடாது என வங்கிகளுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது ? வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் வீடு வாங்க ஏன் தடை விதிக்க கூடாது ? தனி நபர் வாங்கும் 2-வது வீட்டிற்கான பத்திரப்பதிவை ஏன் 2 மடங்காக உயர்த்தக் கூடாது? தனி நபர் வாங்கும் 2-வது வீட்டிற்கான வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணத்தை ஏன் 2 மடங்காக வசூலிக்க கூடாது?என்று நீதிபதிகள் சரமாரியாக வினவினர். இது தொடர்பான விளக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் மார்ச் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து