முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம்; அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களையும் ஏற்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில், விழுப்புரத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, ஜனவரி 8-ம் தேதி) தமிழகத்தின் 33-வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது. அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தென்காசி மாவட்டம் உதயமானது. அதே போல் 27-ம் தேதி கள்ளக்குறிச்சியையும், 28-ம் தேதி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரையும், 29-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிதாக உருவான மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து