முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், 2018-ம் ஆண்டு வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளில் போராட்டக்காரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்ற போது ஏற்பட்ட களேபரத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டவுடன் நடிகர்கள், அரசியல்வாதிகள் என ஒரு படையே தூத்துக்குடி மக்களை நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தது. அதன் வழியே நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடி சென்றிருந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராட்டக்காரர்களை ரஜினி சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். போலீசை மட்டும் குற்றம் கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவர்கள் தான். காவலர்களைத் தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உலகிற்கு காட்ட வேண்டும்.  ஒரு நபர் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், இவ்விகாரம் குறித்து வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகர் ரஜினிக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நடிகர் ரஜினிகாந்த்தை விசாரிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். தேவையேற்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து