முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் பற்றி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இதில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது பற்றிய கருத்துக்கள் கேட்டு அறியப்பட்டன. புதிய திட்டங்கள் நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவது, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, மக்கள் நல திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து