முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல் முறையாக சிறைகளை கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 9 முக்கிய சிறைகளை ஆளில்லாத குட்டி விமானம்  (டிரோன்) மூலமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, சென்னை புழல் 1, புழல் 2, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 9 முக்கிய மாவட்ட சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரத்து 350 பேர் தங்க இட வசதியுள்ளது. சிறையில் உள்ள கைதிகள் அடிக்கடி ரகளை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. சிலர், சிறை வார்டன்களிடம் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மாவட்ட சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா வைத்தும் கைதிகளின் அட்டகாசம் அடங்கவில்லை. மேலும் சிறைகளின் நிலவரங்களை உடனடியாக உயரதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலையிருக்கிறது. இதை தவிர்க்க, தமிழகத்தில் 9 மாவட்ட சிறைகளில் ஆளில்லாத குட்டி விமானம் (டிரோன்) பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 21.85 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த டிரோன், கொள்முதல் செய்ய சிறைத்துறை நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் 14-ம் தேதி டிரோன் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக சிறைகளில் முதல் முறையாக டிரோன் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 50 கி.மீ. வேகத்தில் ஆயிரம் மீட்டர் தூரம் சுற்றி வரும் வகையிலான டிரோன் வாங்கப்படும்.இந்த ட்ரோனில் ஜி.பி.எஸ். வசதி இருக்கும். இது தவிர 20 மெகா பிக்சல் வசதியுடன் கூடிய கலர் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். 20 நிமிட நேரம் டிரோன் தொடர்ந்து பயன்படுத்த முடியும். 64 ஜி.பி அளவிற்கு சேமிப்பு வசதி இருக்கும்.சிறை அறைக்குள் நடக்கும் விதிமுறை மீறல், செல்போன், சிகரெட், கஞ்சா பயன்பாடு, கைதிகள் மோதல் ஆகியவற்றை இந்த டிரோன் மூலமாக அறிய முடியும். சிறைகளில் ஜாமர் கருவியை தொடர்ந்து பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சிறை கைதிகளுக்கு பார்வையாளர்கள், உறவினர்கள் வழங்கும் உணவுகளில் ஏதாவது முறைகேடான பொருட்கள் மறைக்கப்பட்டிருக்கிறதா? என கண்காணிக்க நவீன ஸ்கேனர்கள் உள்ளது. டிரோன் பயன்பாட்டிற்கு வந்தால் சிறைகளை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து