முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகர்,ஒன்றிய பள்ளி மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் சீர்மிகு திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ,மாணவியருக்கு விலையில்லா மிதிவிண்டிகள் வழங்கிடும் திட்டத்தின் கீழ் தற்போது தமிழகம் முழுவதிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின்  பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி,அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,ஜோதி தர்மர் அசிசி மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாக்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.வட்டாட்சியர்  தலைமை வகித்தார். திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.ஏராளமான மாணவ,மாணவியர் பங்கேற்று பயனடைந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமங்கலம் நகரம்,ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ,மாணவியர் 3000 பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாணவ,மாணவிகள் கரவொலியெழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: மாணவ,மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிகணிணி,விலையில்லா சைக்கிள் மற்றும் 14வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.மாணவ,மாணவியருக்காக அம்மா செல்படுத்தி வந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் தற்போது கூடுதலாக பல்வேறு சிறப்பு மிகு திட்டங்களை முதல்வர் எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் நல்லாட்சி நடத்திடும் நாடு அது அன்னைத் தமிழ்நாடு என நாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.அதே போல் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக அன்னைத் தமிழகம் திகழ்கிறது.மேலும் மக்களின் மனநிலை புரிந்து செயல்படும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.அதனால் தான் மக்கள் மற்றும் மாணவ,மாணவியரின் உணர்வுகளை புரிந்து கொண்டு 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அரசாணையை தாயுள்ளத்துடன் தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார்.இதன் மூலம் புரட்சித்தலைவர் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் அனைவரும் பாஸ் என்கிற நிலை தற்போதும் தொடர்கிறது.எனவே தமிழக அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை மாணவ,மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாக்களில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,மாவட்ட கல்வி அலுவலர் இந்திராகாந்தி,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன்,துணை சேர்மன் வளர்மதிஅன்பழகன்,திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆண்டிச்சாமி,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி, துணைச் செயலாளர் சுகுமார், சுமதிசாமிநாதன் ஒன்றிய கவுன்சிலர்கள் மின்னல்கொடி,செல்வம்,பரமன்,சிவபிரியா,முத்துப்பிள்ளை, வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,துரைப்பாண்டி,வாசிமலை கட்சி நிர்வாகிகள் கொடிவைரன்,சிவன்காளை,சிவகுமார்,கட்டாரி வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து