முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் தலைவாசலில் 9-ம் தேதி கோலாகல விழா: சர்வதேச தரத்தில் கால்நடைஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் : சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 9-ம் தேதி அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி  வைக்கிறார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் தெற்காசியாவிலேயே சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வரும் 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி  வைக்கிறார்.

இந்த கால்நடைப்பூங்கவானது இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் மேலை நாடுகளில் இருந்தும் கூட இங்கு வருகை தந்து படிக்கும் வகையிலும், அவர்கள் இங்கேயே தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லமல் தமிழகத்தில் உள்ள நாட்டு கால்நடையினங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாட்டினங்களை பாதுகாக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு நாட்டுப்பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப் பிராணிகளான நாய்கள் ஆகியவற்றை இங்கே உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல்   மீன்வளர்ப்பு, ஆடு வளர்ப்பு இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து விவசாயப்பெருங்குடி மக்களுக்கும், குறிப்பாக சிறு, குறு விவசாயிகளும் இங்கே வருகை தந்து கால்நடைகளை வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டு அதன்மூலம் வருவாயினை பெருக்கிக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே அவர்களுக்கு பயிற்சியினை கொடுத்து இங்கேயே தங்கும் வசதியையும் பெற்றுத் தந்து அவர்களது வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொள்ள முடியும். 

வரும் 9-ம் தேதி நடக்கவுள்ள இந்த கால்நடைப்பூங்கா திறப்பு விழாவில் ஒரு லட்சம் நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். அதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கும் கண்காட்சி நடைபெறவுள்ளது. 9-ம் தேதியன்று காலை 9 மணி அளவிலே லஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளைப் பற்றிய பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு கால்நடைக் கல்லூரிகளில் சேர்வது பற்றி எடுத்துரைக்கப்படவுள்ளது. இதில் பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கலந்து கொள்கின்றனர். அதே போல் பொதுமக்கள் பார்ப்பதற்காக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும்   ஒவ்வொரு விதமாகவும், மிகப்பிரமாண்டமாகவும், தமிழ்நாட்டில் இவ்வாறெல்லாம் உள்ளதா என்று மக்கள் எண்ணும் அளவிற்கு உள்ளது. விவசாயக் கண்காட்சிகளை விவசாயிகள் பார்த்து விட்டு விவசாயத்தில் என்னென்ன ரகங்கள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். கால்நடை மருத்துவக்கல்லூரியானது இந்த ஆண்டே துவங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதே போல இவ்விழாவின் மூலம் 15,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. முன்னதாக இந்த விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து