முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

சென்னையில் நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறியதாவது:-

வங்கி அதிகாரிகளின் தொடர்புகளை உயர்த்த  மத்திய அரசிடம் திட்டம் உள்ளது.  நாட்டின் பொருளாதாரம் ஒரு வலுவான நிலையில் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகபட்ச நிலையில் உள்ளன. அமைச்சகத்தின்  அதிகாரிகள் கள அளவில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) தொழில்முனைவோரை அணுகுவார்கள். எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு காரணமின்றி வங்கிகள் கடன்களை மறுக்கிறார்களானால், அவர்கள்  தங்கள் புகார்களை அனுப்பலாம், அதற்குரிய வசதி இது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் நகலை வங்கி மேலாளருக்கு அனுப்ப வேண்டும் என கூறினார். பின்னர் நிர்மலா சீதாராமன் சென்னை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. எந்த மாநிலத்திற்கு என்றும் தனியாக நிலுவைத் தொகை வைக்கவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும்.  விவசாயிகளுக்கான நிதி உதவிகள்  அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை சதவிகித பங்குகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து