முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. மூன்று லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி. நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஜெயசெல்வி , எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சக்கையா என்பவரின் மகன் முருகன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தரரேவு கிராமத்தைச் சேர்ந்த மொட்டையாண்டி என்பவரின் மனைவி காட்டுராணி எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் முனியாண்டி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், தருமநீதி கிராமத்தைச் சேர்ந்த  முத்து என்பவரின் மகன் நடராஜன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி  உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மகேஸ்வரி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த புங்காலு நாயுடு என்பவரின் மகன் குமார் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்  என்ற செய்தியையும், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் செல்வன் ஹரிஹரன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,  சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜெயா தெருவில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி தமிழ்செல்வி உயர் அழுத்த மின் கம்பி பட்டு, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரின் மகன் அலிஷியாம் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், போட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த  முருகேசன் என்பவரின் மகன் வில்லாளி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்  என்ற செய்தியையும்,கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிக்கதாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கணேசன் விவசாய நிலத்தில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் விஷ்ணு என்கிற முருகவேல் இரும்பு கம்பிகளை இறக்கி வைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்கம்பியில் பட்டு  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் மின் கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தி. பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவக்கவுண்டர் என்பவரின் மகன் ராமமூர்த்தி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகள் செல்வி வர்ஷா பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த  17 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து