முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களைமேம்படுத்த பல திட்டங்களை  அறிவித்துள்ளார். மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் மூலதனநிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவு பெற்றுள்ளன. 

இதன் ஒரு பகுதியான சிறந்த தொழில் முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 13.02.2020 அன்று காலை 9.30 மணி அளவில் இலவச ஒருநாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில்பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.  பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டபயிற்சிக்கு அழைக்கப்படுவர். 

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன்  மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதிஉதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.  திட்டங்கள் மூலம் நிதிஉதவி பெறும் ~தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர் திட்டடங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்குபெறலாம். 

இப்பயிற்சிகளில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து