கொலம்பியாவில் விமான விபத்து - 4 பேர் பலி

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      உலகம்
Plane crash Colombia 2020 02 13

பொகடா : கொலம்பியா நாட்டில் இரட்டை என்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டின் தலைநகரான பொகடாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.அங்குமிங்கும் பறந்த விமானம் பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து