முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களுக்கே சென்று அம்மா உணவக உணவு விநியோகம்: ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

கட்டுமான பணியாளர்கள் பணியாற்றும், தங்கும் இடங்களுக்கே சென்று ‘அம்மா’ உணவக உணவுகளை வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினர்களுக்கு குறைந்த விலையில் சத்தான, சுகாதாரமான உணவு வழங்குவதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் நாளன்று அம்மா உணவகங்களை திறந்து வைத்தார். இந்த முன்னோடித் திட்டம், உலக அளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ளதோடு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.

இம்முன்னோடித் திட்டத்திற்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் பொருட்டும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘லாப நோக்கமற்ற’ ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா உணவகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் கட்டுமானப் பணியாளர்களை கவனத்தில் கொண்டு, அவர்கள் தங்கும் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அம்மா உணவகம் உணவு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்க முகமை சேகரிக்கும். அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். வருவாய் வரவுகள், பெறப்பட்ட பங்களிப்புகள், நன்கொடைகள் ஆகியவற்றிற்கும் அதன் செலவினத்திற்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும். 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அம்மா உணவகத் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து