முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். - ஓ. பி.எஸ். ஆலோசனை

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமை கழகத்தில் நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடந்தது. கடந்த 10 -ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அ.தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தனர். சட்டசபை கூட்டம் நடைபெற இருந்த காரணத்தால் கடந்த 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்றைய கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர், புறநகர், காஞ்சிபுரம் மத்திய கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், வேலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்கு தயார்படுத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று மாலையிலும் தலைமை கழகத்தில் 7 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு, தெற்கு, வட சென்னை கிழக்கு, மேற்கு, தெற்கு தென்சென்னை வடக்கு, தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து