ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆனது

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      உலகம்
japan ship corono affect 2020 02 16

 டோக்கியோ : ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.  

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.  
அதில் இருந்த 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அந்த கப்பலில் இதுவரை மொத்தம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவார்கள்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 3 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து