16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி காதலை வெளிப்படுத்திய வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      உலகம்
soldier romance 2020 02 16

மாஸ்கோ : ரஷியாவில் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வீரர் ஒருவர் தனது காதலியிடம் 'லவ் ப்ரபோஸ்' செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.  

உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இளைஞர்களும், இளம்பெண்களும் விரும்பும் நபரிடம் தங்கள் காதலை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

இதில் பலர் ரோஜா பூக்களை காதலன் அல்லது காதலிக்கு வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்தினர். சில காதலர்கள் வித்தியாசமாக இந்த காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேபோல் ரஷியாவை சேர்ந்த ராணுவ ஒரு வீரர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் ப்ரபோஸ் செய்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?

ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ்(23) . இவர் அலெஸ்சாண்டிரியா(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த வெள்ளிக்கிழமை அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றான். அங்கு டெனிஸ் சக வீரர்களின் உதவியுடன் மொத்தம் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார். 

அப்போது கண்ணை திறந்த காதலி அலெஸ்சாண்டிரியா ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன்னை லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார். என்னை காதலிக்கிறாயா? என கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த அவர் உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்பதம் தெரிவித்தார். இதனால் காதலர்கள் இருவரும் இன்பத்தில் மகிழ்ந்தனர்.

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ராணுவ வீரர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து