ஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      விளையாட்டு
IPL chennai clase mumbai 2020 02 16

மும்பை : 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 29-ம் தேதி ஐ.பி.எல். திருவிழா தொடங்குகிறது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சந்தித்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 30-ம் தேதி நடக்கும் 2-வது லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. 6 நாட்களில் அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்த முறை இரட்டை ஆட்டங்கள் கிடையாது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. லீக் சுற்று அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம், அணியின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் போட்டி அட்டவணை கசிந்துள்ளது. இறுதிப்போட்டி மே 24-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து